பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! குவிக்கப்பட்டுள்ள காவல்துறை
Sri Lankan Tamils
Colombo
By Independent Writer
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்று கொழும்பில் செய்யப்பட்டுள்ளது.
இந்நினைவேந்தல் கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில், (அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிராக) மாலை 5 மணிக்கு ஆரம்பமானது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் விதமாக நிகழவுள்ள இந்த நினைவேந்தலில் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர்.
எனினும் சில இனவாத போக்குடையோர் மற்றும் சிங்கள ராவய அமைப்பினரும், குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக செயற்பட்டு வருகின்றனர்.
இதன்போது குறித்த தரப்பினர் பாதுகாப்பு தரப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு இனவாத கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி