குருக்கள்மடம் மனிதப்புதைகுழி ஆய்வின் இறுதி அறிக்கை! வெளியாகியுள்ள அறிவிப்பு
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி ஸ்கேனிங் நடவடிக்கையின் இறுதி அறிக்கை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாணை இன்று(18) திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரைணயின் போது, வழக்கிற்கு தொடர்புடையவர்களும் நீதிமன்றுக்க சமூகமளித்திருந்ததாக கூறப்படுகிறது.
ஸ்கேனிங் நடவடிக்கைகள்
மேற்படி வழக்கில் கடந்த 2026.05.14 ஆம் திகதி மன்றினால் ஆக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக கடந்த 15,16,17 ஆம் திகதிகளிலே பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான நிபுணத்துவக் குழுவினால் மனித புதைக்குழி அமையப்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்ற அந்த இடத்திலேயே Magneto telluric audio frequency முறையை பயன்படுத்தி ஸ்கேனிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அந்த அடிப்படையிலே குறித்த ஸ்கேனிங் தொடர்பான விடயங்களை மன்றுக்கு அறிவிப்பதற்கென இன்றைய தினம் திங்கட்கிழமை(18.05.2026) குறித்த வழக்கு நீநீதிமன்றத்திலே அழைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆய்வின் இறுதி அறிக்கை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என பிரத்தியட்சக முறைப்பாட்டாளரான ரவூப் அப்துல் மஜீத் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தொடர்புடைய வழக்கு எதிர்வருகின்ற 26 ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளுக்காக திறந்த நீதிமன்றத்திலே அழைக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |