ஷிரான் பாசிக்கிற்கு உயிர் அச்சுறுத்தல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டதற்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் விசாரிக்கப்பட்டு வரும் சந்தேக நபரான "ஷிரான் பாசிக்கிற்கு" தேவையான பாதுகாப்பை வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
நாரஹேன்பிட்ட காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் விசாரிக்கப்பட்டு வரும் சந்தேக நபருக்கு முறையான பாதுகாப்பு இல்லை என்று அவரது சட்டத்தரணி வசந்த பிட்டிகல தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கால்நடையாக அழைத்துச் செல்லப்படும் சந்தேக நபர்
ஒவ்வொரு நாள் காலையிலும் சந்தேக நபர் நாரஹேன்பிட்ட காவல் நிலையத்திலிருந்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கால்நடையாகவே அழைத்துச் செல்லப்படுகிறார் என்று சந்தேக நபரின் சட்டத்தரணி தெரிவித்தார்.

அதன்படி, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றின் உத்தரவு
இதனைக் கருத்தில் கொண்ட நீதிபதி, நாரஹேன்பிட்ட காவல்தறை மற்றும் மத்திய குற்றத் தடுப்புப் பணியகத்தின் இயக்குநரகம் சந்தேக நபருக்கு முறையான பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டார்.

you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |