தமிழ் எம்.பிக்களை பகடைக்காயாக வைத்து அரசியல் செய்யும் இந்தியா !
தமிழ்நாட்டில் (Tamil Nadu) திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி (Kanimozhi) ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளாராகவும் செயற்படுகின்ற அன்பின் செல்வேஸ் (Anbin Selvesh) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் (Shanakiyan R) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) ஆகியோர் இந்திய நாடாளுமன்றின் திராவிட முன்னேற்றக் கழக சார்பான தலைவர் கனிமொழியை சந்தித்திருந்தனர்.
இந்தியா (India) - தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு சென்னையில் (Chennai) இடம்பெற்றிருந்தது.
இதன்போது, ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காக தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த சந்திப்பு தொடர்பான காரணங்கள் தொடர்பில் அன்பின் செல்வேஸ் விரிவாக தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |