இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச தடை: இந்தியாவுடன் இணைந்து சதி
இந்தியாவுடன் இணைந்து இலங்கை கிரிக்கெட்டை தடை செய்வதற்காக சதித்திட்டம் தீட்டப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற விவாத்தின் பின் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதியில் இயங்கும் பிரபல விடுதி ஒன்றில் இரகசிய சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளதாகவும் அந்த சந்திப்பின் போதே குறித்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச தடை
குறித்த சந்திப்பில் இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஷாவிடம் கோரிக்கை விடுத்து நாற்பத்தெட்டு அல்லது எழுபத்தி இரண்டு மணி நேரத்திற்குள் இலங்கை கிரிக்கெட் சர்வதேச அளவில் தடைசெய்ய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தமையாலேயே இலங்கை கிரிக்கெட் அணி மீதான சர்வதேச தடையொன்றை மேற்கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகின்றதாக எதிர்கட்சி தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.