சிறிலங்காவுக்கு ஐசிசி கொடுத்த அதிர்ச்சி: கிரிக்கெட் சபை விடுத்துள்ள கோரிக்கை
முதலாம் இணைப்பு
சிறிலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவாதாக அறிவித்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) குறித்த செயற்பாட்டை இடைநிறுத்துமாறு ஷம்மி சில்வா தலைமையிலான சிறிலங்கா கிரிக்கெட் சபை இன்று (10) கோரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்கா கிரிக்கெட் சபை பிரதிநிதிகளை பார்வையாளராக பங்கேற்க ஐசிசி வாரியம் அனுமதித்துள்ளதால், அகமதாபாத்தில் நடைபெறும் ஐசிசி கூட்டங்களில் ஷம்மி சில்வாடா பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்தியா சென்றுள்ள சிறிலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, இலங்கை கிரிக்கெட் சபையினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக ஐ.சி.சி.யால் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
சிறிலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்துள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடமைகளை மீறிய சிறிலங்கா
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடியிருந்த நிலையில், சிறிலங்கா கிரிக்கெட் தமது உறுப்பினராக அதன் கடமைகளை கடுமையாக மீறுகிறது என்று தீர்மானித்தது.
சிறிலங்கா கிரிக்கெட் அதன் விவகாரங்களை சுயமான முறையில் நிர்வகிக்க வேண்டும் என்பதுடன், நிர்வாகம், ஒழுங்குமுறையில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிடுகிறது.
இந்நிலையில், சிறிலங்கா கிரிக்கெட் தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதால் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதன் உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.