20 வருட ரகசியம்: ஜோசப் பரராஜசிங்கம் கொலையின் பின்னணியில் மாபெரும் அரச சதி...
வடக்கு, கிழக்கு, புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தை ஒன்றிணைக்கும் பலமான இணைப்பாளர்களாக விளங்கிய ஜோசப் பரராஜசிங்கம், ஊடகவியலாளர் சிவராம், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் பேராசிரியர் தம்பையா போன்ற ஆளுமைகள் திட்டமிட்டே படுகொலை செய்யப்படதாக இன்றளவும் குற்றச்சாட்டுக்கள் வலுத்து வருகின்றன.
குறிப்பாக தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவு Connectors vs Dividers என்ற தந்திரோபாயத்தைப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
அந்த அடிப்படையிலேயே கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையின் போது, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அரச சதித் திட்டம் குறித்தும், அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேசிய ரகசியங்கள், அதில் சுற்றிக்கிடக்கும் மர்மங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |