வடக்கில் கஞ்சா கடத்திய காவல்துறை அதிகாரி கைது!
vavuniya
arrested
stf
constable
cannabis-trafficking
By Jaso
ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில் காவல்துறை சார்ஜன்ட் உட்பட இருவர் புளியங்குளம் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புளியங்குளம் ஸ்ரீ முத்துக்குமார நகரப் பகுதியில் சுமார் 7 கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது, அவருக்கு கஞ்சாவை வழங்கியதாகக் கூறப்படும் ஓமந்தை காவல்நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா காவல்துறையினரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்