காவல்துறை உத்தியோகத்தரின் ஏமாற்றுவேலை - எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாடு
காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாடுகளை விசாரணை செய்ததாக போலியான வாக்குமூலங்களைப் பதிவுசெய்து முறைப்பாட்டாளர்களையும் காவல்துறை உத்தியோகத்தர்களையும் தவறாக வழிநடத்திய பாணந்துறை வடக்கு காவல் நிலையத்தின் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (04) பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை வடக்கு காவல்துறை பிரிவின் சமூக காவல்துறை பிரிவில் கடமையாற்றும் சுஜீவ கருணாரத்ன என்ற உத்தியோகத்தரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணித்தடை
பாணந்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்னவின் உத்தரவுக்கமைய இந்த பணித்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை கெசல்வத்தை பிரதேசத்தில் மர ஆலை உரிமையாளரால் அச்சுறுத்தப்பட்ட நபருக்கு எதிரான முறைப்பாடு மூன்று மாதங்களுக்கு மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என முறைப்பாட்டாளர் பாணந்துறை காவல்துறை அத்தியட்சகரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பாணந்துறை உதவி அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன முறைப்பாட்டாளரால் முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டதை அவதானித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கையொப்பங்களை போலியாக பதிந்துள்ளமை
மேலதிக விசாரணையின் போது சந்தேகத்திற்குரிய காவல்துறை உத்தியோகத்தர் 5 முறைப்பாடுகள் உரிய விசாரணையின்றி உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமலேயே விசாரணை செய்யப்பட்டதாக பொய்யாக குறிப்பிட்டு முறைப்பாட்டாளர்களின் கையொப்பங்களை போலியாக பதிந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த காவல்துறை உத்தியோகத்தர் 4 வருட சேவை கொண்டவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
