கட்டுமானப் பொருட்களின் விலைக்குறைப்பு - அமைச்சரின் அறிவிப்பு!
Sri Lanka
Cement Price in Sri Lanka
Dollars
World
By Rajitha
உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளது.
விலை அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில் விலை குறைப்பு வீதம் மிகவும் மந்தமாகவே காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நிர்மாணத்துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
விலையில் வீழ்ச்சி
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
கட்டுமானப் பொருட்களின் விலை வீழ்ச்சியை அவதானித்து, ஒரு மாதத்தில் உரிய விலை குறைப்பு சதவீதத்தை சரியாக அறிவிப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி