டொலர் இல்லை - கொழும்பு துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் உணவு கொள்கலன்கள்
colombo port city
containers
dollars
By Sumithiran
கொழும்பு துறைமுகத்தில் 2500 இற்கும் அதிகமான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தேங்கிகிடப்பதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவற்றை விடுவிப்பதற்கு தேவையான டொலர்கள் வழங்கப்படாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த கொள்கலன்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கி கிடப்பதாகவும், அதில் அரிசி, சீனி, உளுந்து, பருப்பு, செத்தல் மிளகாய், பழங்கள், கொத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை தற்போது உணவுப்பொருட்கள் பற்றாக்குறை மற்றும் தேங்கி கிடக்கும் உணவுகொள்கலன்கள் தாமதமாக விடுப்பதால் ஏற்படும் செலவை ஈடுசெய்ய அதிகரிக்கும் விலை அதிகரிப்பால் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி