தொடரும் டொலர் நெருக்கடி - மட்டுப்படுத்தப்படவுள்ள விமான சேவை!!
SriLankan Airlines
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
By Kanna
நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக இலங்கைக்கு சேவையாற்றும் விமான சேவை நிறுவனங்களுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன் விளைவாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொழும்பில் இருந்து தங்கள் விமானங்களை மட்டுப்படுத்த தீர்மானம் எடுத்துள்ளன.
கடந்த 3 – 6 மாதங்களில் சரக்கு மற்றும் பயணிகள் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளது என்றும் விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இலங்கை வங்கிகள் மூலம் வெளிநாட்டு நாணயத்தில் பணம் அனுப்ப முடியாமல் போனதன் விளைவுகள் இவை எனவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்