ரிஷாட்டின் வீட்டிற்கு சென்ற விசேட பொலிஸ் குழு! மனைவி உள்ளிட்ட மூன்று பேரிடம் வாக்குமூலம்
colombo
investigation
risad bathiyudeen
By Shalini
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதினின் வீட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட மூன்று பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இன்று மாலை பொரள்ளையில் உள்ள ரிஷாட்டின் வீட்டிற்கும் விசேட பொலிஸ் குழு ஒன்று சென்று விசாரணைகளை நடத்தியுள்ளது.
டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி கடந்த 3ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் திகதி உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
