யாழில் வைத்தியசாலை ஒன்றில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை - மக்கள் விசனம்
யாழ்ப்பாணம் (Jaffna) - அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் கடாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நாய்களினால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக நோயாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் பல்வேறு நோய்களுக்காக அயல் பிரதேசங்களில் இருந்து நாளாந்தம் 200க்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
மழையுடன் கூடிய காலநிலை
தற்போது மழையுடன் கூடிய கால நிலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவும் சூழ்நிலையில் இவ்வாறு கடாக்காலி நாய்கள் வைத்தியசாலை வளாகத்துக்குள்ளும் விடுதிகளுக்குள்ளும் சென்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலைகளில் நாய் கடிக்கு உள்ளாகி செல்பவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் குறித்த விடயம் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு நாய்களின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பெண்நாய்களுக்கான கருத்தடை செயற்றிட்டத்தினை நல்லூர் பிரதேச சபை முன்னெடுக்கின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |