திருகோணமலையில் முளைத்த புத்தர் சிலை: போராட திரளும் பிக்குகள்
இன்று திங்கட்கிழமை திருகோணமலை கடற்கரையோர சட்டவிரோதக் கட்டுமானம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் மீளவும் எடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் இன்று திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட கட்டுமானம் அமைந்துள்ள திருகோணமலை பிரதான கடற்கரை பகுதிக்கு முன்பாக இந்த கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பௌத்த தேரர்கள் கைது
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளி இடங்களில் இருந்து பலர் வருகை தரவுள்ளனர் என்வும் தெரியவருகின்றது.

இதேவேளை திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
அத்துடன் சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் எனவும் பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் கடந்த (06) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |