சர்சைக் கருத்துகளை வெளியிட்ட தேரர் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Sri Lanka Police
By pavan
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(12.07.2023) கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் கடந்த மே மாதம் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டார்.
பௌத்த மதத்திற்கு அவமரியாதை

ராஜாங்கனே சத்தராதன தேரர், மத சகவாழ்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், பௌத்த மதத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டதாக அவருக்கு எதிரான முறைப்பாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி