தேசியத்தலைவருக்கு நினைவேந்தல் சதியா? ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய மூலப்புள்ளிகள்
அண்மைய நாட்களாக சமூக ஊடகங்களை அதிகளவில் ஆக்கிரமித்துள்ள ஒரு விடயம் தேசிய தலைவருக்கான நினைவேந்தல் நிகழ்வாகும் அது நிகழ்த்தப்படுவதற்கு ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் இருவேறு கோணங்களில் வார்த்தைகளால் மோதிக்கொள்கின்றன.
இந்த நிலையில் தேசியத்தலைவருக்கான நினைவேந்தல் தொடர்பில் எழுகின்ற முரண்பாடுகள் உலக தமிழர்களின் மரணங்களை ஆழமான ஒரு பாதிப்பை உண்டாக்கி வருகிறது .
தேசிய தலைவரை வைத்து ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டுமா ? சர்ச்சைக்குட்படுத்துகின்ற பெயரா அது போன்ற கேள்விகள் எழுகின்ற நிலையில் உண்மையில் இந்த நினைவேந்தல் என்பது தமிழ் மக்களுக்கு சாதகமா ?
அல்லது அது ஒரு சதி நடவடிக்கையா என்ற கேள்வி எழாமல் இல்லை செம்மணி போன்ற நீதி கோரப்படவேண்டிய அவசியமான விடயங்கள் உலக அளவில் பேசப்படுவதை தவிர்க்க இப்படியான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறார்களா?
இதுபோன்ற கேள்விகளுக்கும் தலைவர் இருக்கிறார் என்ற தரப்பின் நியாயங்கள் இல்லை என்ற தரப்பின் நியாயங்கள் அவர் இல்லை ஆனால் அதைவெளிப்படுத்தக்கூடாது என்ற தரிப்பின் நியாயங்களையும் ஈழத்தமிழினம் இதனை எப்படி கையாளவேண்டும் என்பதனையும் ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
தமிழர்களின் எதிர்பார்ப்பும் அடுத்து வரும் நாட்களை தமிழர்கள் கட்டமைத்துக்கொள்ளவேண்டிய தேவையையும் இந்த விடயங்களின் காத்திரங்களையும் ஆழமான ஒரு அலசலை செய்கிறது இந்த காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
