நீதிக்காகக் காத்திருக்கும் ஒரு தேசத்தின் முன் மீண்டும் பல கேள்விகள்
நீதிக்காகக் காத்திருக்கும் ஒரு தேசத்தின் முன் மீண்டும் பல கேள்விகள் நிற்கின்றன.
செய்ததாகக் கூறப்படும் குற்றத்தை ஒருவர் ஒப்புக்கொண்ட பின்னரும் நீதி கிடைக்கவில்லை என்ற அனுபவத்தைச் சந்தித்த தேசத்தில், ஒரு புதைகுழியாவது நீதியைப் பெற்றுத் தருமா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதானே?
இங்கு எமது அச்சம் வெறும் எலும்புக்கூடுகள் பற்றியது அல்ல. அவற்றின் பின்னால் புதைந்திருக்கக்கூடிய உண்மைகள் பற்றியது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதில்கள் பற்றியது.
வரலாற்றை அறிவியல் ஆதாரங்களுடனும் சட்டத்தின் அடிப்படையிலும் நிறுவ வேண்டிய கடமை பற்றியது. ஆனால், எமது சமூக ஊடக வெளியில் என்ன நடக்கிறது?
அடுத்த முதலமைச்சர் யார் என்று போலிக் கணக்குகள் மூலம் வாக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன.
செம்மணி போன்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் நமது கவனத்தையும் அரசியல் பொறுப்புணர்வையும் கோரிக்கொண்டிருக்கும்போது, நாம் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம்?
செம்மணியில் புதைக்கப்பட்டிருப்பது மனித உடல்கள் மட்டும்தானா? அல்லது நமது சமூகத்தின் நீதி மீதான நம்பிக்கையுமா?
புதைகுழிகள் பேச முடியாது. அவற்றுக்காக நாம் பேச வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். அறிவியல் ஆதாரங்கள் சுதந்திரமாக ஆராயப்பட வேண்டும்.
அகழ்வுப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு முன்பு எழுப்பிய கேள்விகள் இன்னும் விடையின்றி நிற்கின்றன.
வரலாறு நம்மைக் கேள்வி கேட்கும். அப்போது நாம் என்ன செய்துகொண்டிருந்தோம் என்று பதில் சொல்ல வேண்டியிருக்கும்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |