கல்வி அமைச்சுக்குள் வெடித்தது சர்ச்சை - உயர் அதிகாரிக்கு எதிராக அமைச்சர் போர்க்கொடி?
Dinesh Gunawardena
education ministry
Mahinda Rajapaksa
By Sumithiran
கல்வி அமைச்சின் செயலாளருடன் தன்னால் இணைந்து பணியாற்ற முடியவில்லை எனவும் எனவே அவரை பதவி நீக்குமாறும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன(Dinesh Gunawardena), பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம்(Mahinda Rajapaksa) முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கல்வி அமைச்சின் செயலாளர் பதவிக்கு வேறொரு நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர், பிரமரிடம் கோரியுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் பதவிக்கு, கல்வி அமைச்சர் ஒருவருடைய பெயரை பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளார்.