மாகாணங்களுக்கிடையிலான வீதிப் போக்குவரத்தில் கொண்டுவரப்படும் புதிய மாற்றம்!
இலங்கையில் உள்ள அனைத்து பிரதான மற்றும் மாகாணங்களுக்கிடையிலான வீதிகளை கட்டணச் சாலைகளாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
100 மில்லியன் ரூபா ஆரம்ப நிதியுடன் அரசாங்கம் விரைவில் சாலை பராமரிப்பு நிதியை (RMF) அமைக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறியுள்ளது.
இதனை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கட்டணச் சாலை
முறையான வீதிப் பராமரிப்பை உறுதி செய்வதற்கும், வீதிகள் நிர்மாணிப்பு மற்றும் பராமரிப்புக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய செலவினங்களைக் குறைப்பதற்கும் இது பங்களிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக ஏனைய நாடுகளுக்கு இணையாக RMF ஐ நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 5 மணி நேரம் முன்
