கோப் குழு பதவியிலிருந்து விலகிய எரான் விக்கிரமரத்ன
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற (கோப்) குழுவின் உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் நேற்றைய தினம் (17)கையளித்ததாக இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற (கோப்) குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அவர்களின் தனிப்பட்ட நடத்தைகளுக்கு எதிராக குறிப்பாக நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் இருப்பது அதிருப்தி அளிக்கின்றது.
இதுவும் நாடாளுமன்றத்தின் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கையை இழக்கச்செய்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளிலிருந்து விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |