பெருமளவு இந்திய சுற்றுலா பயணிகளுடன் கொழும்பிற்கு வந்தது சொகுசு கப்பல்
'கோர்டெலியா எம்பிரஸ்' எனும் பயணிகள் சொகுசு கப்பல், 1,600 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 588 பணியாளர்களுடன் இன்று (26) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் கொழும்பில் தரித்திருக்கும் வேளையில், கப்பலில் வந்த சுமார் 1,800 பேர் கொழும்பு நகரம், பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் காலி ஆகிய இடங்களுக்குச் சுற்றுலா மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
90 சதவீதத்தினர் இந்தியர்கள்
வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் சுமார் 90 சதவீதத்தினர் இந்தியர்கள் ஆவர்.

முதன்மையாக இந்திய மற்றும் தெற்காசிய சுற்றுலாச் சந்தைகளை இலக்காகக் கொண்டு இயங்கும் 'கோர்டெலியா எம்பிரஸ்', இந்தியாவிற்குள் உள்நாட்டுப் பயணங்களையும், பிராந்திய ரீதியிலான சர்வதேசக் கடல் பயணங்களையும் மேற்கொள்கிறது.
டிசம்பர் மாதம் மூன்று முறை வருகை தரவுள்ள கப்பல்
210 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில் 11 தளங்களும், பயணிகளுக்கான 796 அறைகளும் உள்ளன.

2026–2027 சுற்றுலாப் பருவத்தின் ஒரு பகுதியாக, இந்தக் கப்பல் அடுத்த மாதம் டிசம்பர் 17, 24 மற்றும் 31 ஆகிய திகதிகளில் மீண்டும் மூன்று முறை கொழும்பு துறைமுகத்திற்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |