சடுதியாக அதிகரித்த கொத்தமல்லி விலை!
Nuwara Eliya
Sri Lanka
Economy of Sri Lanka
Vegetables
By Shalini Balachandran
நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், நுவரெலியா (Nuwara Eliya) விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கரட் 125 முதல் 145 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கொத்தமல்லி
அத்துடன் ஒரு கிலோகிராம் லீக்ஸ் 270 முதல் 290 ரூபாவாகவும் மற்றும் பீட்றூட் 320 முதல் 340 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும், ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 290 முதல் 310 ரூபாவிற்கும் மற்றும் ஒரு கிலோகிராம் கொத்தமல்லி 1,800 முதல் 1,900 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்