கொரோனா மரணம் தொடர்பில் வெளியான விபரம்!
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 15 ஆண்களும், 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 23 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 09 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை15,473 ஆக அதிகரித்துள்ளது நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும்1,137 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை612,322 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை417 பேராக அதிகரித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை578,849 ஆக அதிகரித்துள்ளது.
