கொழும்பில் 40,000 பேர் தொடர்பில் வெளியான செய்தி
Vaccine
People
Sri lanka
By Shalini
கொழும்பில் 60 வயதுக்கு மேற்பட்ட 40,000 பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் காரணமாக இவர்கள் தடுப்பூசி போடுவதைத் தவிர்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.
ஒருவகை தடுப்பூசி மற்றொன்றை விட சிறந்தது அல்லது வெளிநாடுகளுக்கு செல்பர்களுக்கு தடுப்பூசியால் ஏற்படும் பிரச்சினை போன்ற வதந்திகள் காரணமாக பலர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மறுப்பதாக கூறினார்.
கிடைக்கக்கூடிய அனைத்து தடுப்பூசிகளும் பயனுள்ளதாக இருப்பதாக குறிப்பிட்ட அவர்,
எவ்வாறாயினும் உயிரிழப்புகளைத் தடுக்க, கிடைக்கக்கூடிய தடுப்பூசியை மக்கள் தாமதமின்றி பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி