இந்திய மாநிலமொன்றில் 10 அமைச்சர்கள் 20 எம்.பிக்களுக்கு கொரோனா
india
corona
ministers
Maharashtra
By Jaso
இந்தியாவின் மாநிலமான மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய மகராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார்,
அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
சோதனையின் முடிவில் 10 அமைச்சர்களுக்கும் 20 எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அஜித் பவார் தெரிவித்தார்.
இதையடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அஜித் பவார், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி