இரண்டு நாட்களில் 300 ற்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா -திணறும் மகாராஷ்டிரா மாநிலம்
india
corona
maharashtra
doctors
By Sumithiran
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 நாட்களில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும், சொந்தமாக கிளினிக் வைத்திருக்கும் மருத்துவர்களில் 300க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், அம்மாநிலத்தில் மருத்துவ சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோன 3வது அலையில் வேகமாகப் பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸால் நாடு முழுவதும் ஏராளமான முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களில் 50 பேர் கடந்த வாரத்தில் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இலேசான அறிகுறிகள் இருந்ததால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டனர்.
டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும் 23 மருத்துவர்கள் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்