ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி!
Srilanka
Corona
Confirm infection
Rajika Wickramasinghe
By MKkamshan
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்கவுக்கு (Rajika Wickramasinghe) கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
