பிரதமரின் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் டி.எம். அநுர திஸாநாயக்கவுக்கு (D.M. Anura Dissanayake) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அநுர திஸாநாயக்க, இதற்கு முன்னர் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக கடமையாற்றியுள்ளதோடு, பல்வேறு அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளையும் வகித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்கவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுவரை 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
