யாழில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு..!
COVID-19
COVID-19 Vaccine
Jaffna
Sri Lanka
By pavan
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதாகிய வயோதிபர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகின்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 665,626ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளது.
