கடந்த வாரம் 51 சிறுவர்கள் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி
srilanka
corona
children
By Sumithiran
கொரோனா தொற்றுக்குள்ளான 51 சிறுவர்கள் கடந்த வாரம் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குழந்தை மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இதற்கிடையில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 12 சிறுவர்கள் நேற்று முன்தினம் (24) மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிறுவர்களிடையே கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதாகவும், அவர்களுக்குகொரோனா தடுப்பூசி வழங்கப்படாததால் இந்த நேரத்தில் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி