சிங்கப்பூரில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று
COVID-19
Singapore
By Sathangani
சீனாவில் 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியதால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன.
இந்நிலையில் தற்போது பல நாடுகளில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10ஆயிரம் அதிகம்
முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சுமார் 10ஆயிரம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்குாறு அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி