வருட இறுதியில் வரப்போகும் கொவிட் சுனாமி - மக்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
people
Prof. Channa Jayasumana
booster dose
corona-tsunami
By Jaso
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணம் செய்வதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண (Prof. Channa Jayasumana)பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவிக்கையில்,
பூஸ்டர் டோஸ் எடுக்காமல் மக்கள் ஒன்று திரண்டால் இந்த வருட இறுதிக்குள் கொவிட் சுனாமி வரலாம்.
"மக்கள் மீண்டும் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற ஆர்வமாக உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசியைப் பெறாமல் வேடிக்கை பார்க்கப் போகிறோம் என்றால், டிசம்பர் கடைசி வாரத்தில் கொவிட் சுனாமிக்கு தயாராக வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்