கோவிட் நோய்த்தொற்று தொடர்பில் தொற்றுநோயியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!
COVID-19
COVID-19 Vaccine
Sri Lankan Peoples
By Pakirathan
இலங்கையில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட கோவிட் நோயாளர்கள் பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தவகையில், கடந்த வாரம் 42 கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த வாரம் கோவிட் நோயாளர் ஒருவர் இறந்துள்ளதாகவும் இலங்கை தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோவிட் நோய்ப்பரவல்
நாட்டில் நிலவுகின்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள வைரஸ் காய்ச்சல், டெங்கு நோய்ப்பரவல் என்பவற்றை தொடர்ந்து கோவிட் நோய்ப்பரவலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடனும், உரிய சுகாதாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் இலங்கை வைத்திய அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
நான்காவது தடுப்பூசி
இதுவரை 20,2571 பேர் மாத்திரமே கோவிட் நோய்த்தடுப்பு தடுப்பூசியின் நான்காவது டோஸைப் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்