இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் மரணம்
COVID-19
COVID-19 Vaccine
Gampaha
Sri Lanka
By Vanan
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
கொவிட் தடுப்பூசி
இதன்படி, மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கினிகம பகுதியில் 80 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட எந்தரமுல்ல – அக்பார்டவுன் பகுதியில் 81 வயதான ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
கினிகம பகுதியில் உயிரிழந்த பெண், கொவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசியை சேலுத்திக்கொள்ளவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மஹர சுகாதார வைத்திய அதிகாரி நிஹால் கமகே தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி