ஜேர்மனியை விடாது துரத்தும் கொரோனா - 24 மணிநேரத்தில் 28 ஆயிரம் பேர் பாதிப்பு
corona
germany
increase
By Sumithiran
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளநிலையில் ஜேர்மனி, பெல்ஜியம் நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இத்துடன் சேர்த்து அந்த நாட்டில் இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்து 47 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 314 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதுவரை அங்கு 1 இலட்சத்து 4 ஆயிரத்து 227 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து 51.70 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து உள்ளனர். 9.72 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி