அதிர வைக்கும் தங்கம் விலை - நகை வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
உலக சந்தையில் சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3,100 டொலர்களை தாண்டியுள்ளது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த விலையாக பதிவாகியுள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் இன்றைய (02.4.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 929,739 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 32,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 262,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 30,070 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 240,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 28,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 229,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

