‘மேயர் பேயரானார்..’ ‘மற்றொரு மேயர் மைனர் குஞ்சானார்..! எல்லாம் மட்டக்களப்பில் தான்
‘மேயர் பேயரானார்..’ என்ற தலைப்பு ஒரு காலத்தில் மிகவும் சர்சைக்குள்ளான தலைப்பு.
மட்டக்களப்பு (Batticaloa) மாநகரசபை மேயர் ஒருவரை விமர்சிக்கும் வகையில், மட்டக்களப்பில் இருந்து அந்தக் காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்த ‘விடிவானம்’ என்ற சஞ்சிகை அப்படியான ஒரு தலைப்பில் ஆக்கம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
‘மேயர் மைனர் குஞ்சானார்..’ என்ற தலைப்பில் ஒரு ஆக்கத்தை எழுதலாம் என்று நினைத்து, மட்டக்களப்பின் ஒரு முன்நாள் மேயர் பற்றிய தகவல்களையும், ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்க, கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக பல கோடி ஊழல் ஆதாரம் ஒன்று கைகளில் கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு மேயராக அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் அரச காணி ஒன்றை அபகரித்து, அதனை துண்டு துண்டாகப் பலருக்குப் பலகோடி ரூபாய்க்கு விற்று வந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கான ஆதாரங்களும் கைகளில் கிடைத்துள்ளன.
‘மிஸ்டர் கிளீன்’ என்று தோறணை காட்டிக்கொண்டு, வெள்ளையும் சொள்ளையுமாக மட்டக்களப்பு நகரம் முழுவதும் வலம்வந்து கொண்டிருந்த அந்தப் பேயர்.. மன்னிக்கவும் மேயர்.. இப்பொழுது வசமாக மாட்டியுள்ளார்.
கிழக்கின் அரசியலையே மாற்றி விடக்கூடிய அந்த ஊழல் பற்றிய பரபரப்புத் தகவல்கள் வெகு விரைவில் (தேர்தலுக்கு முன்பாக) ஊடகங்களில் வெளிவர உள்ளன.
அந்த பேயர்.. மன்னிக்கவும் மேயர் சார்ந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த முன்நாள் மேயருக்காக வக்காலத்து வாங்கிவருகின்ற விடயமும் விலாவாரியாக வெளிவர உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
