24 மணிநேரமும் இயங்கும் சுடுகாடு -களுத்துறை வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் சடலங்கள்
corona death
kaluthurai hospital
piled up
By Sumithiran
அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 க்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள பல அரச வைத்திய சாலைகளில் குவிந்து கிடப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
களுத்துறை பொது வைத்தியசாலை மற்றும் பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் இந்த சடலங்கள் குவிந்து கிடப்பதாக தெரியவருகிறது.
இவ்வாறு குவிந்து கிடக்கும் சடலங்களைத் தகனம் செய்ய ஆரம்பித்துள்ளதாக களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத உடல்கள் வைத்தியசாலை பிணவறைகளில் இருப்பதால் அவற்றைச் சேமித்து வைக்க இடப்பற்றாக்குறை நிலவுவதால் குறித்த உடல்களைத் தகனம் செய்வதற்காக களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து சுடுகாடுகளும் 24 மணி நேரமும் செயற்படும் என வைத்தியர் தெரி வித்துள்ளார்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி