யாழ் சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல்! நள்ளிரவில் வெளியான காணொளி
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அர்ச்சுனாவின் நியமனம் தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், இதற்கு பதிலடி வழங்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவானது யாழில் இடம்பெறும் அரச வைத்தியதுறையின் ஊழல் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
முன்னதாக வைத்தியர் இந்த விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இன்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மற்றுமொரு காணொளி வெளியிட்டு மேலதிக தகவல்களை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மூன்று வைத்தியர்களால் தான் தாக்குதலுக்குள்ளானதாகவும் தனது கைத்தொலைபேசி மற்றும் பணத்தினை அவர்கள் எடுத்து சென்றுள்ளதாகவும் காவல்துறையினரும் அதற்கு துணை போவதாக பதில் வைத்திய அத்தியட்சகரான வைத்தியர் அர்ச்சுனா குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 05 July, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.