பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது - வர்த்தக அமைச்சர் அறிவிப்பு
பொய்யான அறிக்கைகளை விடுத்து அரசியல் ரீதியாக அரைகுறையாக இருக்க முடியாது என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன(Dr. Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்திலிருந்து இவ்வருட இறுதி வரை 100 ரூபாவிற்கும் குறைவான பெறுமதியான அரிசியை சதொச ஊடாக பொதுமக்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளோம். சதொசவில் இருந்து 5 கிலோ விலையில் எந்த வகையான அரிசியையும் வாங்கலாம்.
மேலும் 50 பொருட்களை சதொசவில் இருந்து தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும். ஒரு கிலோ சீனி 125 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஒரு கிலோ பருப்பு 240. நூடில்ஸ் பைக்கெட்டின் விலை 125.
பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது, வர்த்தக அமைச்சர் என்ற வகையில் என்னால் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார். "பொய் சொல்லி அரசியல் பலிகடாவாக இருக்க முடியாது"என அவர் மேலும் தெரிவித்தார்.