தேசபந்துவை எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர்
புதிய காவல்துறை மா அதிபராக (IGP) தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை (CC) அங்கீகாரம் வழங்கவில்லை என்றும் நாட்டின் அரசியலமைப்பு இரண்டாவது தடவையாக அப்பட்டமாக மீறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து தனது ‘எக்ஸ்’(டுவிட்டர்) தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
சஜித்தின் பதிவு
“அரசியலமைப்பு பேரவையினால் காவல்துறை மா அதிபர் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் மற்றும் 2 பேர் வாக்களிப்பதை தவிர்த்தும் இருந்தனர்.
முடிவெடுக்க குறைந்தபட்சம் 5 வாக்குகள் தேவை. வாக்குகள் சமமாகும் போது மாத்திரம் பயன்படுத்தக்கூடிய அறுதியிடும் வாக்கு சபாநாயகருக்கு உள்ளது.
4/2 என்பது சமமான வாக்குகள் அல்ல! இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது வெட்கம் சபாநாயகர் அவர்களே!” என குறிப்பிட்டுள்ளார்.
புதிய காவல்துறை அதிபர்
இலங்கையின் 36ஆவது காவல்துறை மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (26) நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41C.(1) மற்றும் 61E.(b) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இணங்க இந்த நியமனம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
CC didn’t approve IGP’s appointment. Votes: 4 for; 2 against; 2 abstentions. At least 5 votes are required for a decision. Speaker has a casting vote only in case of a tie. 4/2 is not a tie! Constitution is being blatantly violated for the second time. Shame on you speaker!
— Sajith Premadasa (@sajithpremadasa) February 26, 2024
வழக்கு விசாரணை ஒன்றிற்காக காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.
காவல்துறை மா அதிபர் வருகையையொட்டி உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |