எல்லோரையும் குற்றம் சுமத்தி நாட்டை கட்டியெழுப்ப முடியாது: வஜிர அபேவர்தன
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka
Vajira Abeywardena
By Dilakshan
நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எல்லோர் மீதும் குற்றம் சுமத்தி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு தொடர்பில் கட்சி அமைப்பாளர்களுக்கு அறிவிக்கும் முகமாக கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க
மேலும் அவர் தெரவிக்கையில், “அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசியக் கொள்கையொன்றை நாம் உருவாக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் பொறுப்பை புறக்கணித்த போது சரிந்த நாட்டை ரணில் விக்ரமசிங்க கட்டியெழுப்பினார்.
நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையாவிட்டால், அது எப்போதும் உலகின் முன் பிச்சை எடுக்கும் தேசமாக மாறியே காணப்படும்” என்றார்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்