02 ஆண்டுகளில் முதல்முறையாக கொரோனா ஊரடங்கை அறிவித்துள்ள நாடு
உலகில் பல நாடுகளும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் பல சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
ஆனால் கிரிபாடி என்ற சிறிய நாடு, முதல் முதலாக கொரோனா ஊரடங்கை நேற்று அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து சுமார் 4,800 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சிறியதீவில் 1.2 லட்சம் பேர் வாழ்கிறார்கள். கடந்த வாரம் வரை இந்த தேசத்தில் இருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை, பிஜி நாட்டிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த 54 பேரில் 36 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிபாடி மக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்கு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
