முக்கிய வாக்குறுதியை மீறும் புடின்: தளம்பல் நிலைக்கு செல்லும் ரஷ்யா
ரஷ்யாவில் வரவு செலவு திட்ட பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், அரசு பெறுமதி சேர் வரி (VAT) விகிதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நிலைத்தன்மையை பேணவும், கைருப்புகளை பராமரிக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என புடின் நிர்வாகம் கருதுகிறது.
புடினின் நிலைப்பாடு
ஆனால் போர் முடியும் வரை புதிய வரி உயர்வுகள் இருக்காது என்று பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்த புடினின் நிலைப்பாட்டுக்கு இது முரணாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், செப்டம்பர் 29ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட வரைவு சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் முக்கிய அம்சங்கள் ஏற்கனவே ஜனாதிபதி புடின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற விவாதத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போர்
மூன்று நாட்களில் முடியும் என்று எதிர்பார்த்த உக்ரைன் போர், தற்போது நான்காவது ஆண்டில் தொடர்கிறது. இதற்கிடையில் ரஷ்யா, இந்த ஆண்டில் தனிநபர் வருமான வரியும் நிறுவன வரியும் உயர்த்தியிருந்தது.
இருப்பினும் மே மாதத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.7% அளவுக்கு மூன்று மடங்கு அதிகரித்த வரவு செலவு திட்ட பற்றாக்குறையை நிர்வாகம் ஏற்க வேண்டியிருந்தது.
இந்த நிலையில், தற்போதைய 20% VAT வரி வீதத்தை 22% ஆக உயர்த்துவது பரிசீலனையில் உள்ளது. ஆனால் எண்ணெய் வருவாய் ஒதுக்கீட்டு விதி செயல்பாட்டில் இருக்கும் வரை, இந்த மாற்றம் 2026க்கான வரவு செலவு திட்டத்தில் மட்டுமே நடைமுறையாகும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
