ராஜபக்சர்களின் முன்னாள் சகாவின் குற்றப்பட்டியல் அம்பலம்!
ஐஸ் என்ற போதைப்பொருள் ரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படும் சிறிங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபரான குறித்த நபர், 2015 முதல் மூன்று சந்தர்ப்பங்களில் சுமார் 22 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் அரிசி லொரி திருட்டுகளைச் செய்து அதற்காக 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டள்ளார்.
சக்திவாய்ந்த அரசியல்வாதியின் ஆதரவு
அத்துடன், 106 கிலோகிராம் கஞ்சா வைத்திருந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்நேரத்தில் சந்தேகநபரான மனம்பேரி, சுமார் 10 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, ரூ. 50,000 அபராதம் செலுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி கூறியுள்ளார்.
இதேவேளை, 2024 பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அபராதத் தொகையைச் செலுத்தியதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் காவல்துறை விசாரணைகளில், சம்பத் மனம்பேரி முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டதும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
