புத்தாண்டு தினத்தில் இரவில் துப்பாக்கி சூடு...! கொழும்பில் பதற்றம்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Law and Order
By Shalini Balachandran
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01) இரவு பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நவகமுவ, கொரத்தொட்ட மெனிககரா சாலை பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்து ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தநிலையில், துப்பாக்கிச் சூடு மூன்று ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்