மாநகர சபையில் சுருட்டப்பட்ட கோடிக்கணக்கான பணம்: கம்பி எண்ணப் போகும் முக்கிய புள்ளிகள்
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ள நிலையில், மாநகர சபை உறுப்பினர்களின் ஊழல் இனி கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கங்களில் மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை இதற்கு மேலும் வலுசேர்க்கின்றது.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்.......!
கடந்த காலத்தில் இருந்த மாநாகர சபை உறுப்பினர்கள் எந்த எந்த வகையில் ஊழல் செய்து எவ்வளவு கைப்பற்றியுள்ளனர் என்பது அவர்களுக்கே தெரியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, அரசாங்கத்திற்கு வர வேண்டிய வருமானத்தையும் மாநகர சபைக்கு செலுத்தாமல் தங்களது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துகின்றார்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரிந்த விடயம் என தெரிவித்த அவர் அவ்வாறு ஊழலில் ஈடுபட்டவர்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்குவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தற்போதைய அரசியல் களம் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களை உள்ளடக்கி வருகின்றது கீழுள்ள காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |