விண்ணைத் தொடும் பணவீக்கம்...! ஈரானை உலுக்கும் மக்கள் போராட்டம்
ஈரானில் கடும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரானில் 1979 இல் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பு சட்டப்படியே அங்கு ஆட்சி நடந்து வருகின்றது.
பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததும் அமெரிக்க டொலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்தது.
போராட்டங்கள்
இந்தநிலையில், மூன்று ஆண்டுக்குப் பின் அங்கு மீண்டும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஆரம்பத்தில் பொருளாதாரக் கோரிக்கைகளுடன் ஆரம்பித்த போராட்டம், பின்னர் அரசுக்கு எதிரான முழக்கங்களாக மாறியுள்ளன.

இதனடிப்படையில் டெஹ்ரான் மையப் பகுதியில் ஆரம்பித்த போராட்டங்கள், இஸ்பஹான், ஷிராஸ் மற்றம் மஷ்ஹத் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் பரவியுள்ளது.
இந்தநிலையில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
பொது சொத்துக்கள்
பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

போராட்டங்கள் வெடித்ததிலிருந்து ஏற்பட்ட முதல் உயிரிழப்புகள் இது என தெரிவிக்கப்படுகின்றது.
டெஹ்ரானில் இருந்து தெற்கே 650 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் மோதல்கள் மற்றும் கல்வீச்சு காரணமாக பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |