நெருக்கடிக்குள் சிக்கப்போகிறது நாடு : பட்ஜட் குறித்து அநுரகுமார எச்சரிக்கை
அதிபர் ரணில் முன்வைத்துள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடனைப் பெறுவது மற்றும் அரச சொத்துக்களை விற்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் அதிபரின் வரவு செலவுத் திட்ட உரையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.திஸாநாயக்க,
நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதை
அரசாங்கம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
தோல்வியுற்ற நடவடிக்கைகள் முன்மொழிவு
அரசாங்கம் கடன் கடன் வரம்பை ஆரம்பத்தில் முன்மொழியப்பட்டதை விட மேலும் ரூ. 3400 பில்லியனால் அதிகரிக்கப்பபோவதாகவும் குற்றம்சாட்டினார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு புதிய தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக, அதிபரும் அவரது அரசாங்கமும் தமது பழைய மற்றும் தோல்வியுற்ற நடவடிக்கைகளை மீண்டும் முன்மொழிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.